Ticker

10/recent/ticker-posts

தரம் 12 உயர்தர தொழிற்கல்வி தொடர்பிலான விசேட அறிவிப்பு

2025 / 2026 கல்வி ஆண்டில் இரண்டாம் கட்டமாக உயர்தர தொழிற் பாடத்துறையின் தரம் -  12 இற்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்ப படிவங்கள் கோரப்படுகின்றன.

குறித்த விடயம் கல்வி அமைச்சினால் (Ministry of Education) வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், குறித்த பாடத்துறைக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது GCE (O/L) பரீட்சைப் பெறுபேறுகள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.

தொழிற் பயிற்சிப் பாடநெறி

தொழிற் பாடத் துறையின் கீழ், தரம் -  12 இல் பாடசாலைக் கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்து தரம் 13 இல் கீழே தரப்பட்டுள்ள தொழிற் பாடங்களின் ஒன்றில் தேசிய தொழிற் தகைமை மட்டம் 04 இற்குரிய தொழிற் பயிற்சிப் பாடநெறி ஒன்றிற்கு மாணர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்  என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வகையில் கீழ் குறிப்பிட்டுள்ள பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு NVQ சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

1. குழந்தை உளவியல் மற்றும் பாதுகாப்பு

2. சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு

3. உடற்கல்வி மற்றும் விளையாட்டு

4. அரங்கற் கலை

5. நிகழ்ச்சி முகாமை

6. கலை மற்றும் கைவினை

7. உள்ளக வடிவமைப்பு

8. நவநாகரீக வடிவமைப்பு

9. கிராஃபிக் வடிவமைப்பு

15. நீர்வளத் தொழில்நுட்பக் கல்வி

16. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை உற்பத்தித் தொழிநுட்பக் கல்வி

17. கட்டுமானத் தொழில் நுட்பக் கல்வி

18.மோட்டார் இயந்திர தொழில்நுட்பக் கல்வி

19. மின் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்ப கல்வி

20. ஜவுளி மற்றும் ஆடை தொழில் நுட்பக் கல்வி


Post a Comment

0 Comments