திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்காட்சியொன்று இன்று (30) ஆரம்பமானது.
குறித்த கண்காட்சியில் மாணவர்களின் சுய கண்டுபிடிப்புகள், பல்வர்ண ஓவியங்கள், விஞ்ஞானம் மற்றும் கணிதம் சார்ந்த செய்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வில், அதிதிகளாக, கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் முனவ்வரா நளீம், குறிஞ்சாக்கேணி கோட்டக் கல்வி அதிகாரி ஆர். நஸீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சி இன்று தொடக்கம் ஜூலை 31 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.
பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொண்டதோடு இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமைகளை பார்வையிட்டு, அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு, சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments