Ticker

10/recent/ticker-posts

கிழக்கு மாகாண பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம் பெற்றது.

 



இச்சந்திப்பில், கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு விடயங்களில் இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் பொதுமக்களுடனான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டன.

 


கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புர மற்றும் 22 வது காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் பெரேரா ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments