பீகார் மாநிலம் கயாவை அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த வாலிபர் அவருடைய மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது வாலிபர், மனைவியை சரமாரியாகத் தாக்கினார். திடீரென ஆவேசமடைந்த அவருடைய மனைவி, கணவனை அடித்து கீழே தள்ளி பின்னர் கணவனுடைய நாக்கை கடித்து மென்று விழுங்கினார்.
நாக்கு துண்டானதால் வாலிபர் வலியால் அலறித் துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது மனைவியின் வாய், முகம் மற்றும் உடல் முழுவதும் இரத்தம் சிதறி கிடந்துள்ளது.
அவ்வேளையில், நாக்கு துண்டான வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் அவருடைய உடலில் இருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலைக்கு சென்றதுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments