Ticker

10/recent/ticker-posts

தூங்க கூட விடுவதில்லை; கணவர் தொடர்பில் அம்பலப்படுத்திய பெண் அரசியல்வாதி!

 இங்கிலாந்தை சேர்ந்த பெண் அரசியல்வாதி கேட் எலிசபெத் நைவ்டன்  (Kate Kniveton) என்பவர் தனது திருமண வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் குறித்து கேட் எலிசபெத் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த பெண் 54 வயது நிறைந்த அரசியல்வாதி கேட் எலிசபெத் நைவ்டன். இவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பர்ட்டன் தொகுதி பாராளுமன்ற உறிப்பினராக 2019 முதல் 2024 வரை பதவி வகித்தார்.


இவர் (Kate Kniveton) தனது முன்னாள் கணவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆண்ட்ரூ கிரிபித்ஸ் (MP Andrew Griffiths)  மீது  குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

கேட் எலிசபெத் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பர்ட்டன் தொகுதியில், அவருக்கு முன்பு 2010 முதல் 2019 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆண்ட்ரு கிரிபித்ஸ் ( Andrew Griffiths)  .

இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 2018 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். ஆண்ட்ரூ கிரிபித்ஸ் ( Andrew Griffiths) தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக சித்ரவதைகளை செய்ததாகவும் கேட் எலிசபெத் (Kate Kniveton) கோர்ட்டில் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தெரஸா மே (Theresa Mary May )ஆட்சியின் போது, செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவராக வலம் வந்த ஆண்ட்ரூ ( Andrew Griffiths) , பெண்கள் உரிமைகளுக்காக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டவராவார்.

அதே சமயம், இவர் (Andrew Griffiths)  பதவியில் இருந்தபோது தனது அலுவலகத்தில் பணியாற்றிய 02 பெண்களுக்கு சுமார் 2,000 ஆபாச குறுஞ் செய்திகளை அனுப்பி சர்ச்சையில் சிக்கியதால் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ-கேட் தம்பதி பிரிவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவர்கள் பிரிந்து விவாகரத்து பெற்ற பின்னர், தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க கோரி கோர்ட்டில் ஆண்ட்ரூ வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கேட், தன்னையும், தனது குழந்தையையும் ஆண்ட்ரூ  ( Andrew Griffiths)  கடுமையாக துன்புறுத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கின் முடிவில் கேட் எலிசபெத்திற்கு  (Kate Kniveton)  சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், தனது திருமண வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் குறித்து கேட் எலிசபெத்  (Kate Kniveton)  ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் தனது கணவரால் ( Andrew Griffiths)  தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்தும் கேட் அம்பலப்படுத்தியுள்ளார்.

நான் தூங்கும்போதுகூட உல்லாசத்தில் இருக்குமாறு சொல்லி வற்புறுத்துவார். கட்டிலிலிருந்து எட்டி மிதித்து கீழே தள்ளுவார். அனைத்தையும் மிகுந்த கண்ணீருடன் பொறுத்துக் கொண்டேன். எனது 02 வயது மகள் பசியில் அழுதபோது அவளிடம் மிகுந்த ஆக்ரோஷத்துடன் நடந்து அவர் கொண்டார்.

அது எனக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியது" என்று கூறியுள்ளார். மேலும் இங்கிலாந்தில் குடும்ப நல நீதிமன்றங்களில் இருக்கும் குறைபாடுகள் குறித்தும் தான் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கேட் எலிசபெத் (Kate Kniveton) பேசியுள்ளார்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்கு குடும்ப நல நீதிமன்றங்கள் தவறிவிடுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments