Ticker

10/recent/ticker-posts

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்தியசாலையில் அனுமதி.

தமிழக முதலமைச்சர் M.K. ஸ்டாலின் சென்னை அப்போலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (22) காலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இலேசாக தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை அப்போலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளததாகவும், அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

02 நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முதலமைச்சர் கலந்து கொள்ளவிருந்த அரச நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 02 நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments