Ticker

10/recent/ticker-posts

ஜனாதிபதி பொது மன்னிப்பில் முறைகேடு: அதுல திலகரத்னவுக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட W.M. அதுல திலகரத்னவுக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி நளின் D. ஹேவாவசம் 07 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.



போலி ஆவணம் தயாரித்து வங்கியொன்றிலிருந்து 3.5 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கிலேயே அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



வங்கியொன்றில் இருந்து பணம் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆவணத்தைத் தயாரித்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் 05 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், முறைகேடு செய்த குற்றச்சாட்டில் மேலும் 02 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



மேலும், இந்த வழக்கின் வாதியான S.W.A. காமினி விமலானானந்தாவுக்கு 400,000 ரூபாய் பண இழப்பீடு வழங்குமாறும், இழப்பீட்டை செலுத்தத் தவறினால் மேலும் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்குமாறும் மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments