இலங்கையில் ஆண் மக்கள் தொகை குறைவது எதிர்காலத்தில் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் என்பவர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இம்மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாகவும் பேராசிரியர் அமிந்த மெத்சில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments