HNDE கற்கைநெறியை பூர்த்தி செய்த டிப்ளோமா தாரர்களுக்கு இதுவரை அரச நியமனம் வழங்கப்படாமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (11) நாடாளுமன்றத்தில் கவலை வெளியிட்டார்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அரச உள்வாரிப் பட்டதாரிகளுக்கான நியமனங்களில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். HNDE படிப்பை முடித்த மாணவர்கள் அரசின் நிரந்தர நியமனத்தை எதிர்பார்த்திருந்த போதும், அரசாங்கம் ஏன் இவவ்விடயத்தில் தாமதம் கொள்கின்றது என்பதாக தனது வாதத்தை கல்வி அமைச்சரிடம் அவர் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
அரசின் அதிகாரப்பூர்வ நியமனங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமச்சீரான அணுகுமுறையை ஏற்படுத்தும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும், டிப்ளோமாதாரிகள் மற்றும் பட்டதாரிகள் நீண்ட காலமாக அரச நியமனத்தை எதிர்பார்த்து வருகின்றனர் என்று தெரிவித்த அவர் விரைவில் தொழில்வாய்ப்பினை வழங்குமாறும் அவர் வேண்டுகோளை முன்வைத்தார்.
0 Comments