அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் அருகிலிருந்த பெண்ணின் செல்போனில் RIP என்ற குறுஞ்செய்தி இருந்ததை பார்த்து, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இருக்கலாம் என்று பெண் பயணி ஒருவர் தெரிவித்ததையடுத்து விமானியால் விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுயானில் இருந்து அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு 193 பயணிகளுடன், அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது.
அப்போது 02 பெண்கள் அருகருகே இருந்துள்ளனர். ஒரு பெண்ணின் செல்போனை மற்றொரு பெண் ஜாடைக் கண்ணால் எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் மொபைல் போனில் "RIP" என குறுஞ்செய்தி வந்துள்ளது.
உடனடியாக அப்பெண் விமானத்தில் பணியாற்றும் பணிப் பெண்ணை அழைத்து வெடிகுண்டு மிரட்டலுக்கான குறுஞ்செய்தி (Message) வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக விமான பணிப்பெண் விமானிக்கு குறித்த தகவலை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விமானத்தை இஸ்லா வெர்டேவுக்கு திருப்பி அவசரமாக தரையிறக்கியுள்ளார் விமானி.
பின்னர், விசாரணையின் போதுதான் RIP என்பதை பார்த்து தவறாக தகவல் தெரிவித்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சமூக வலைத்தளத்தில் அந்த பெண்ணுக்கு கண்டனம் வலுத்து வருகின்றது.
0 Comments