கொழும்பு - காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் நபரொருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்து குழப்பம் விளைவித்துள்ளார். இச்சம்பவம் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காணப்படுகின்ற சமிக்ஞை விளக்கு கம்பத்தில் ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக குறித்த நபர் மிரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த கம்பத்திலிருந்து தான் கீழே விழப்போவதாகவும், உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாகவும் தெரிவித்த நபரை அங்கிருந்த மக்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், குறித்த நபர் கீழே இறங்காமல் தொடர்ந்தும் சமிக்ஞை விளக்கு கம்பத்திலேயே அமர்ந்திருந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டுள்ளனர்.
உயிரை மாய்த்துக் கொள்வதாக தெரிவித்து மிரட்டிய குறித்த நபரை பின்னர் பொலிஸார் அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments