கொரோனா பரவலின் எதிரொலியாக கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர், லடாக் எல்லைப் பிரச்சினை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சில சிக்கல்கள் எழுந்தன.
இதற்கிடையே, அமெரிக்காவுடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா - சீனாவின் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியமை இதற்கான அடித்தளமாக அமைந்தது.
இதனையடுத்து, இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில், கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை நேற்று (26) தொடங்கியது.
ஷாங்காய்-டெல்லி இடையேயான விமான சேவை எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments