Ticker

10/recent/ticker-posts

ரூபாய் 10,900 இற்கு சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற கும்பல்!

இந்தியாவின் - குஜராத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 05 பேர் தங்களுடைய விடுமுறை நாட்களைக் கழிக்க ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றுள்ளனர்.

 அவர்கள் ராஜஸ்தானிலுள்ள ஓர் உணவகத்தில் உணவு சாப்பிடச் சென்றுள்ளனர். குறித்த உணவகத்தில் தங்களுக்கு வேண்டிய உணவுகளை விரும்பியபடி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

பின்னர், சாப்பிட்ட உணவிற்கான பற்றுச்சீட்டை பணியாளர்கள் வழங்கியுள்ளனர்.

 ரூபாய் 10,900 இற்கான பற்றுச்சீட்டைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து, பணத்தை செலுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கழிவறைக்குச் செல்வதாக தெரிவித்து ஒருவர் பின் ஒருவராக உணவகத்திலிருந்து வெளியேறி சிற்றூந்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

உணவகத்தின் உரிமையாளர் காவல் துறையிடம் முறைப்பாடு வழங்கியதையடுத்து, காவல் துறையினர் வீதிகளிலுள்ள பாதுகாப்பு கெமாராக்களை (Camera) பரிசோதித்துக் குறித்த கும்பலை பின் தொடர்ந்து கைது செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்கள் இதற்கு முன்னர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்களா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

0 Comments