Ticker

10/recent/ticker-posts

பேருந்து விபத்து - நால்வர் உயிரிழப்பு. 28 பேர் காயம்.

 கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த போது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பேரூந்து நிறுத்தப்பட்டிருந்த பேரூந்தின் பின் புறத்தில் மோதியதால் 28 பேர் காயமடைந்துள்ளனர்.


விபத்தில் காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சிகிச்சை பலனின்றி 03 ஆண்களும் 01 பெண்ணும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், பின்னால் வந்த பேரூந்து அதிவேகமாக பயணித்ததால் இவ்விபத்து இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது.



மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருனாகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments