Ticker

10/recent/ticker-posts

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் நவம்பர் இல் ஆரம்பம்.

17 வயதுக்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் எதிர்வரும் நவம்பர் 03 முதல் 27 வரை (2025) நடைபெறவுள்ளது.

இவ்வருடம் நடைபெறும் போட்டியில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் 08 ஆட்டங்கள் நடைபெறும் வகையில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறவுள்ளன. அனைத்து ஆட்டங்களும் Aspire Zone பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன விளையாட்டு மைதானங்களில் நடைபெறும். இறுதிப் போட்டியானது பிரபலமான Khalifa International Stadium-இல் நடைபெறும்.

உலகம் முழுவதும் இருந்து 65 நாடுகளின் 500-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் இத்தொடரை நேரடியாக செய்தி வழங்கவுள்ளதாக ஒழுங்கமைப்பு குழு தெரிவித்துள்ளது.


ரசிகர்களுக்காக சிறப்பு Fan Zone

ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Fan Zone-இல் கால்பந்து போட்டிகள், E-Gaming பகுதி, நேரடியான இசை நிகழ்ச்சிகள், மற்றும் பல்வேறு கலாசார கலை நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன. இவை கட்டார் நாட்டினmன் பண்பாட்டையும், பங்கேற்கும் நாடுகளின் பல்வகைமை தன்மையையும் பிரதிபலிக்கும்.


மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கான வசதிகள்

மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்காக சிறப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவையுடையோர் accessibility.u17fw@sc.qa என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக அவர்களுக்கான அணுகல் டிக்கெட்டுகளை பெறலாம்.


🎟️ டிக்கெட் தகவல்

போட்டிக்கான டிக்கெட்டுகள் தற்போது www.roadtoqatar.qa என்ற இணையத்தளத்தில் கிடைக்கின்றன. ரசிகர்கள் ஒரே நாளில் பல ஆட்டங்களை காணுகின்ற வகையில் “Day Pass” பெற முடியும்.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துத் தொடரை 2025 தொடக்கம் 2029 வரை தொடர்ந்து 05 ஆண்டுகள் தொடச்சியாக கத்தார் நடத்தும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.


Post a Comment

0 Comments