கிழக்கில் 33 அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்திய அரசு 2.37 பில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 05ம் திகதி இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.
கிழக்கில் அடையாளம் காணப்பட்ட பிரதான இடங்களில் குறித்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில் மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments