Ticker

10/recent/ticker-posts

உலகின் முதல் 1150 அடி உயரத்தில் சவுதி அரேபியாவின் அதிசய மைதானம்.

2034 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக் கோப்பை தொடருக்காக சவூதி அரேபியா புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராகியுள்ளது. உலகின் முதல் “ஸ்கை ஸ்டேடியம்” (Sky Stadium) எனப்படும் நியோம் மைதானம், கடல்மட்டத்திலிருந்து 1150 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ளது.

இந்த மைதானம் 46,000 பார்வையாளர்களை வரவேற்கும் வகையில் நவீன தொழிநுட்பத்துடன் வடிவமைக்கப்படுகின்றது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் 2027 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளதாகவும், 2032 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

2034 உலகக் கோப்பை தொடர் நடைபெறும் 15 மைதானங்களில் ஒன்றாக இந்த நியோம் 'ஸ்கை ஸ்டேடியம்' இடம் பெறவுள்ளமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments