Ticker

10/recent/ticker-posts

மாகாண சபை தேர்தல் எப்போது?

 மாகாண சபைச் சட்டம் பாராளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லையென்று அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் கிடைத்த பின்னர், மாகாண சபைத் தேர்தல்கள் மாகாண மட்டத்தில் தனித்தனியாக நடத்தப்படுமா? அல்லது ஒன்றாக நடத்தப்படுமா? என்பதை அது முடிவு செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.



"மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையில் நடாத்தப்பட வேண்டுமானால், சட்டத்தில் சேர்க்கப்பட்ட திருத்தத்தை நீக்க வேண்டும். அடுத்த வருடம் (2026) மாகாண சபைத் தேர்தலுக்காக 05 அல்லது 06 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.



இதேபோல், இந்த வருடமும் தேர்தல்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வருடம் அவை நடத்தப்படாவிட்டால், அப்பணம் கருவூலத்திற்குத் திருப்பி அனுப்பப்படும்."


Post a Comment

0 Comments