Ticker

10/recent/ticker-posts

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைத்த உயரிய விருது.

2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வங்கி விருதுகளில், குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை (Global Finance Magazine) இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு "A" தர விருதை வழங்கி கௌரவித்துள்ளது. 

உலகளாவிய ரீதியில் ஏற்படும் சவால் நிலைமைகளை கையாள்வதில் அவருடைய விவேகமான பணவியல் கொள்கை, நிதி அமைப்பு மேற்பார்வை மற்றும் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர், கடந்த 2025 ஒக்டோபர் 13 - 18 ஆம் திகதி வரை வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற உலக வங்கி குழுமம்/சர்வதேச நாணய நிதியத்தின் 2025 ஆண்டு கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

இதனிடையே நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வங்கிகளுக்கான விருதுகளில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments