இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, கணேமுல்ல சஞ்சீவ கொலை குறித்த பல முக்கியமான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாட்டொன்றுக்கு செல்வது தான் தனது வாழ்நாள் கiனவு என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த கனவை நனவாக்குவதாக கெஹெல்பத்தர பத்மே கூறியதன் காரணமாகவே தான் கொலை சம்பவத்திற்கு உதவியாகச் செயற்பட்டதாகவும் குறித்த சம்பவத்திற்காக தான் எந்தவரு பணத்தையும் பெற்றுக் கொள்ளவில்லையெனவும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
இஷாராவுடன் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபருக்கு ரூபாய் 6.5 இலட்சம் வழங்கி, போலி பயண ஆவணங்கள் தயாரித்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இஷாரா
செவ்வந்தி, ஐரோப்பிய நாட்டுக்கு செல்ல வேண்டுமென்ற கனவை அடிக்கடி பத்மேவிடம் பகிர்ந்ததாகவும், பத்மே தனது போதைப்பொருள் விற்பனைச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது இஷாரா செவ்வந்தியையும் பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக கூறப்படும் கான்ஸ்டபிள் ஒருவரை, கொழும்பு குற்றப்பிரிவினர் கைதுசெய்து இன்று கொழும்பு தலைமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments