நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் பாதுகாப்பு அமைச்சு குறித்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதேவேளை, இஷாரா செவ்வந்தி பயன்படுத்திய தொலைப்பேசி கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில், குறித்த தொலைபேசி கொழும்பு குற்றப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகபரான பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைத்த தகவலுக்கமைய தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கை விசாரித்து வரும் கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, செவ்வந்தியை நேற்று விசாரணைக்காக அந்தப் பகுதிக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments