பிரேஸிலில் இளம் அரசியல்வாதியும், சமூக வலைதள பிரபலமுமான பெர்னாண்டா ஒலிவேரா டா சில்வா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேஸிலின் சாவோ லூயிஸ் நகருக்கு அருகிலுள்ள லாகோ வெர்டே பகுதியைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலமான பெர்னாண்டா ஒலிவேரா டா சில்வா உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளைப் பகிர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர்.
அதேசமயம், கடந்த 2020 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று லாகோ வெர்டே நகரின் கவுன்சிலராகப் பதவியேற்றார்.
மேலும், 2021 - 2024 வரை இரண்டு முறை மாநகர சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (Sep 26) தனது வீட்டில் பெர்னாண்டா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
பெர்னாண்டாவின் திடீர் மரணம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவருடைய மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், லாகோ வெர்டே நகரில் 03 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநகர சபை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து மாநகர சபையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில்: ‘கவுன்சிலர் பெர்னாண்டா மரோக்காவின் மரணத்திற்கு லாகோ வெர்டே நகரம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments