Ticker

10/recent/ticker-posts

ICC மகளிர் உலகக் கிண்ணம் - 2025 : இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் மோதல்

 நடப்பு ICC மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்று இன்று ஆரம்பமாகின்றது. இதன்படி இன்று (29) கௌஹாத்தியில் நடைபெறும் முதலாவது அரையிறுதியில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


லீக் போட்டிகளின் நிறைவில் இங்கிலாந்து 02 வது இடத்தையும், தென்னாபிரிக்கா 03 வது இடத்தையும் பிடித்தன. முதல் அரையிறுதி இடம்பெறும் கௌஹாத்தியில் இன்றைய தினம் கடுமையான மழை எதிர்பார்க்கப்படும் நிலையில் போட்டி மழையினால் பாதிக்கப்படுமானால், புள்ளிப் பட்டியலில் 02 ஆம் இடம் பிடித்த இங்கிலாந்து அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

 


முன்னதாக 02 அணிகளும் மோதிய லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


இதேவேளையில், 02 வது அரையிறுதியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் நவி மும்பையில் நாளை வியாழக்கிழமை (30) மோதுகின்றன. இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (02) நவி மும்பையிலும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளுக்கு மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.



 

Post a Comment

0 Comments