கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சித் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தில் சனநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த பிரசாரத்திற்கு TVK தலைவர் விஜய் தாமதமாக வந்ததுதான் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததே இச்சம்பவத்திற்கு காரணம் என்று TVK மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று சட்டத்தரணி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணையின்போது, தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்று இந்திய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

0 Comments