Ticker

10/recent/ticker-posts

சீனாவுக்கு உளவு பார்த்த 07 பேருக்கு ஆயுள் தண்டனை

சீனாவுக்கு உளவு பார்த்த பிலிப்பைன்ஸின் முன்னாள் முதல்வர் உட்பட 07 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பிலிப்பைன்ஸின் பம்பன் நகரத்தின் முன்னாள் முதல்வருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சீனாவைச் சேர்ந்த இவர் சட்ட விரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையைப் பெற்றதோடு அங்கு முதல்வராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி, சீனாவுக்குச் சொந்தமான சூதாட்ட நிறுவனத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 

இதன் மூலமாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 700 இற்கும் அதிகமான மோசடிக்கு இவர் உள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சீனாவுக்கு உளவு பார்த்ததாகக் கூறி ஆலிஸ் குவோ பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதோடு, குறித்த வழக்கு விசாரணை நிறைவடைந்து அவர் உட்பட அவருக்கு உதவியாக இருந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


Post a Comment

0 Comments