34 வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு ஜூலையில் நடக்கின்றது. இந்த ஒலிம்பிக்கில் T20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டிகள் அனைத்தும் T20 வடிவில் (20 Over) நடத்தப்படவுள்ளது. இதனையொட்டி லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து 50 KM தூரத்தில் பேர்கிரவுண்ட்ஸ் என்ற இடத்தில் தற்காலிமாக கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த ஒலிம்பிக்கில் நடைபெறவுள்ள கிரிக்கெட்டில் 06 அணிகள் பங்கேற்கும் என்று ICC அறிவித்துள்ளது.
மேலும் ICC T-20 தர வரிசையில் இடம் பிடித்துள்ள முதல் 06 அணிகளுக்கு பதிலாக, ஒரு கண்டத்திற்கு ஒரு அணியை தேர்வு செய்ய முடிவு என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

0 Comments