அமெரிக்க அரசின் நிதி முடக்க நிலை 35 வது நாளை எட்டியுள்ள நிலையில், ஊதியம் கிடைக்காமல் ஊழியர்கள் பலரும் கட்டாய விடுமுறையில் சென்றுள்ளனர்.
ஆள் பற்றாக்குறையின் எதிரொலியாக முக்கிய துறைகளின் சேவைகள் முடங்கியுள்ளன. அரசுக்கு தேவையான நிதியை விடுவிப்பதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், நிதி விடுவிப்பு தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
ஊழியர்கள் பலரும் விடுமுறையில் சென்றுள்ளதால் அத்தியாவசிய பணிகள் முடங்கியுள்ளன. தொடர்ந்து, 35 வது நாளாக அரச துறைகளுக்கு செலவழிப்பதற்காக பணம் வழங்கப்படவில்லை.
கடந்த 2018 - 2019 இல் ட்ரம்பின் முந்தைய ஆட்சியிலும் இது போல் நிதி முடக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments