கிண்ணியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் கிண்ணியா நகர சபை, பிரதேச சபைக்குட்பட்ட ஆர்வமுள்ள கவிஞர்கள், இலக்கியவாதிகள் அனைவரும் பங்கு பற்றும் வகையில் கவிதை போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.
குறித்த போட்டியில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் கீழ் குறிப்பிடப்படும் whatsapp இலக்கத்திற்கு தங்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு எதிர்வரும் 2025.11. 05 ஆம்திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.
வட்சப் இல. 0771699181
போட்டி நடைபெறும் தினத்தில் கவிதைக்கான தலைப்பு மற்றும் நிபந்தனைகள் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் காலம், இடம் என்பன போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்படும்.

0 Comments