Ticker

10/recent/ticker-posts

அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி படுதோல்வி

அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில், பல்வேறு மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியை தழுவியுள்ளது.

அமெரிக்காவில் 02 வது முறையாக ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், முதன் முறையாக தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. மாநில ஆளுநர், சட்டமா அதிபர், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி தோல்வியடைந்துள்ளது. அமெரிக்காவின் வேர்ஜினியா மாநில ஆளுநர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஸ்பான் பெர்கர், டொனால்ட் ட்ரம்புடைய கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார். வேர்ஜினியா மாநிலத்தில் சட்டமா அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கசாலா ஹாஸ்மி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

நியூஜெர்சி மாநிலத்தின் ஆளுநர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த மிக்கி செரில், டொனால்ட் ட்ரம்புடைய கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார். நியூயோர்க் மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் மம்தானி, டொனால்ட் ட்ரம்பின் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார்.

மாசாசுசெட்ஸ் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த மிசேல் வூ என்பவர் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

இதேபோன்று, கலிபோர்னியா மாநிலத்தில் மாவட்ட தொகுதி மறுவரையறை தொடர்பான ஜனநாயக கட்சியினுடைய நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் மக்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலமாக கலிபோர்னியா மாநிலத்தில் ஜனநாயக கட்சியின் நிலை வலுவாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments