Ticker

10/recent/ticker-posts

தன்சாணியாவில் வெடித்த வன்முறை: 700 பேர் பலி.

தன்சானிய ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசனின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் சாமியா சுலுஹு ஹாசன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதித்  தேர்தலில் மோசடி நடந்ததாக முக்கிய எதிர்க்கட்சியான சடேமா குற்றம் சுமத்தியது. இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் முடிவை ஏற்க மறுத்து அங்கு வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையில் கடந்த 03 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையால் தன்சானியாவில் இணையத்தை முடக்கிய ஆளும் அரசு ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Post a Comment

0 Comments