மேற்கு அவுஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் (Esperance) பகுதியிலுள்ள வார்டன் கடற்கரையில் நூறாண்டுக்கு மேலாக புதைந்திருந்த ஒரு போத்தலிலிருந்து கடிதங்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.
இப்போத்தல், 1916 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மால்கம் நெவில் (Malcolm Neville) மற்றும் வில்லியம் ஹார்லி (William Harley) என்ற இரண்டு அவுஸ்திரேலிய படைவீரர்களால் எழுதப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படை வீரர்கள் இருவரும் முதல் உலகப் போரில் பிரான்ஸ் போர்க்களத்துக்குச் செல்லும் கப்பலில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போத்தலை, டெப் ப்ரவுன் (Deb Brown) என்ற பெண்மணி தனது கணவர் பீட்டர் மற்றும் மகள் பெலிசிட்டியுடன் கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது கண்டெடுத்துள்ளார்.
போத்தலுக்குள் இருந்த கடிதங்கள், பென்சிலால் எழுதப்பட்டிருந்ததாகவும், இருவரும் HMAT A70 Ballarat என்ற கப்பலில் இருந்ததாகவும் கதெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதம் எழுதப்பட்டு ஒரு வருடத்துக்கு பின்னர் நெவில் போரில் உயிரிழந்ததாகவும், ஹார்லி இரண்டு முறை காயமடைந்தபோதும் உயிர் பிழைத்து, பின்னர் 1934 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

0 Comments