2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது இன்று 118 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேறியது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ் முற்போக்கு கூட்டணி பட்ஜெட்டுக்கு இதற்கு ஆதரவாக வாக்களித்தது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பின் காரணமாக குறித்த ஆதரவு வழங்கப்பட்டதாக அதன் தலைவர் மனோ கணேசன் மற்றும் உபதலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி மார் ஆகியோர் சபையில் அறிவித்தனர்.
வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நாளை 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் இடம்பெற்ற பின்னர், வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

0 Comments