சிம்பாப்வே மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான T20 முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (17) SLC வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைவர் சரித் அசலங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு வீரர்களும் சரியான கவனிப்பைப் பெறுவதையும், எதிர்கால கிரிக்கெட் பணிகளுக்கு குணமடைய போதுமான நேரத்தையும் உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு திரும்புவார்கள் என்பதுடன்,
இதற்கிடையில், முன்னாள் தலைவரும் அனுபவமுள்ள சகலதுறை வீரருமான தசூன் ஷானக்க பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் முத்தரப்புத் தொடருக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் முடிவடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஒருநாள் போட்டியில் அறிமுகமான, இதுவரை விளையாடாத துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்கவும் T20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் 3 - 0 என்ற கணக்கில் தொடரை இழந்ததன் பின்னணியில் இலங்கை முத்தரப்பு தொடரை எதிர்கொள்கின்றது.
அடுத்த வருடம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ICC ஆடவர் T20 உலகக் கிண்ணத்துக்கு 03 அணிகளுக்கும் வரவிருக்கும் போட்டிகள் முக்கிய ஆயத்தங்களை வழங்கும்.
தொடரின் முதலாவது போட்டி இன்று (18) பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் ஆரம்பமாகும்.
இலங்கை அணி விபரம்
தசூன் ஷானக்க (தலைவர்)
பத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டீஸ்
குசல் பெரேரா
கமில் மிஷார
கமிந்து மெண்டீஸ்
பவன் ரத்நாயக்க
பானுக ராஜபக்ஷ
ஜனித் லியனகே
வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷன
துஷான் ஹேமந்த
துஷ்மந்த சமீர
நுவான் துஷார
எஷான் மலிங்க

0 Comments