Ticker

10/recent/ticker-posts

பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் காலமானார்

90 களில் அமெரிக்காவில் மிகவும் பரவலான கார்ட்டூன் தொடர் 'தி சிம்ப்சன்ஸ்' ஆகும். இது பிந்திய நாட்களில் உலகம் முழுவதும் தனி இரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது.

'தி சிம்ப்சன்ஸ்' ஐ உருவாக்கியவர் பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத் என்பவராவார். 1997 ஆம் ஆண்டு 'தி சிம்ப்சன்ஸ்' தொடரின் 'ஹோமர்ஸ் போபியா' என்ற எபிசோடுக்காக இவருக்கு எம்மி விருது கிடைத்தது.

61 வயதான டான் மெக்ராத் சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நவம்பர் 14 ஆம் திகதி காலமானதாக அவருடைய சகோதரி கெயில் மெக்ராத் தெரிவித்துள்ளார். இது அவருடைய கார்ட்டூன் ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments