Ticker

10/recent/ticker-posts

தாய்வான் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்: சீனாவை எச்சரித்த ஜப்பான் பிரதமர்.

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி அண்மையில் பதவியேற்றார். ஆசிய நாடுகள் பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் டோக்கியோவுக்கு வந்து சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை நடத்தினார்.

அப்போது இரண்டு நாடுகளிடையே இராணுவ, பொருளாதார உறவுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்ககளும் கையெழுத்தானது.

இந்நிலையில், டோக்கியோவில் பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய சனே தகைச்சி "அண்டை நாடான தாய்வானை தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது. மேலும் தாய்வான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகின்றது. தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் இராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும்" என்றார். 

இது இரண்டு நாடுகளுக்கு இடையே பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது. ஜப்பான் பிரதமரின் இக்கருத்துக்கு மன்னிப்பு கோரி சீன அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Post a Comment

0 Comments