Ticker

10/recent/ticker-posts

தினமும் காலையில் ஒரு கப் பப்பாளி: கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

பப்பாளி பழம் ஒரு ஆரோக்கியமான உணவாகும். இப்பழம் நார்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்த உணவாக அமைகின்றது.

அவ்வகையில், தினமும் காலையில் ஒரு கப் (Cup) பப்பாளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிடைக்கும் நன்மைகள் என்ன?

பப்பாளி பழத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பச் செய்து, பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். இதனால் உடலின் எடை குறையும்.

பப்பாளியிலுள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவும்.

மேலும், இதில் சர்க்கரை அளவு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் காணப்படுவதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.

பப்பாளியிலுள்ள ஹைப்போலிபிடெமிக், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கல்லீரல் சேதத்தை தடுத்து அதன் செயற்பாட்டை மேம்படுத்தும்.

பப்பாளியிலுள்ள நொதிகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இறந்த சரும செல்களை நீக்குவதற்கும், சருமத் துளைகளை சுத்தப்படுத்தவும், சரும சுருக்கங்களை தடுக்கவும் உதவுகின்றது.

மேலும், இதிலுள்ள அதிகப்படியான நார்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

பப்பாளியிலுள்ள விட்டமின் C இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியை தூண்டவும், நோயெதிர்ப்பு செயற்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன.


Post a Comment

0 Comments