Ticker

10/recent/ticker-posts

தமிழ் பிக்பாஸ் பிரபலம் அதிரடி கைது: அம்பலமான மோசடி

பண மோசடி வழக்கில் தென்னிந்திய பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷ் பணகுடி பொலிஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தண்டையார் குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரால் வழங்கப்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு அரசு வேலை பெற்றுத் தருவதாக கூறி நடிகர் தினேஷ் ரூபாய் 03 இலட்சம் பெற்றதாகவும் ஆனால், அரசு வேலை வாங்கி தரவில்லை எனவும் முறைப்பாடு அளித்தவர் தெரிவித்துள்ளார்.

பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் நடிகர் தினேஷை கைது செய்து பொலிஸார் விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னத்திரை இரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ், பிக்பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments