மெக்ஸிக்கோ ஜனாதிபதி கிளாடியா ஷீயின்பாம் என்பவர், குறித்த நபரொருவர் தன்னை முத்தமிட முயன்றதாக அந்நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மெக்ஸிக்கோவின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்ற கிளாடியா ஷீயின்பாம், மக்களுடன் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது வீதிகளில் இறங்கி உரையாடுவது வழக்கமானதாகும். அப்போது பொதுமக்கள் அவருடன், 'செல்பி எடுத்துக் கொள்வதுடன், கைகுலுக்கி உரையாடி மகிழ்வர்.
அவ்வகையில், மெக்ஸிக்கோ நகரின் மையப்பகுதியில் காரில் இருந்து இறங்கி பொதுமக்களுடன் நேற்று (05) இவர் உரையாடிக் கொண்டிருந்தார்.
அவவேளையில் மது போதையில் இருந்த ஒருவர், பின்னால் இருந்து ஜனாதிபதியை கட்டியணைத்து முத்தமிட முயன்றுள்ளார்
இதனையடுத்து மெக்ஸிக்கோ ஜனாதிபதி கிளாடியா ஷீயின்பாம் அந்நாட்டின் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

0 Comments