Ticker

10/recent/ticker-posts

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்.

அரச சேவையில் புதிதாக 72,000 அரசாங்க ஊழியர்களை ஆட்சேர்ப்புகளை செய்வதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த ஆட்சேர்ப்புகள் ஒவ்வொரு துறையினாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இக்குழுவில், சுகாதார சேவைக்காக 9,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 7,200 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 1,800 பேர் டிசம்பர் மாத இறுதிக்குள் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னைய அரசாங்கங்கள் தேவை மற்றும் வெற்றிடங்களை கருத்திலற் கொள்ளாமல் அரசாங்க ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ததாகவும், அரசியல் தேவைகளின் அடிப்படையில் அவர்கள் பாகுபாடற்ற முறையில் ஆட்சேர்ப்புச் செய்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சில அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் எந்த அமைச்சரின் காலத்தில் இணைந்தார்கள் என்பதைக் கண்டு பிடிக்க முடியும். எனினும், அரசாங்கத்தில் அத்தகைய முறைகளைப் பின்பற்றுவதில்லை என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அரசியல் நியமனங்களை வழங்குவதில்லை. அரச சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்கள் மற்றும் பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு ஆட்சேர்ப்பு செய்வதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

டிஜிட்டல் மயமாக்கலைக் கருத்திற் கொண்டு அத்தியாவசிய சேவைகளுக்கான ஆட்சேர்ப்புகளையும் செய்துள்ளோம். ஓய்வு பெறும் அளவிற்கு சில ஒழுங்கு முறைகளுடன் ஆட்சேர்ப்புகள் செய்யப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments