இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜான்சர்-பவார் பழங்குடி பகுதியில் உள்ள 25 கிராமங்களில், மது மற்றும் துரித உணவுகளுக்கு (Fast Food) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், கிராம சபைக் கூட்டங்களில் ஒருமித்த தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாகத் திருமண விழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பீட்சா, பாஸ்தா போன்றவற்றை விருந்தினர்களுக்கு வழங்கினால் 01 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டியிருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, திருமணங்களில் விலை உயர்ந்த பரிசுகள், வெள்ளி நாணயங்கள், உலர் பழங்கள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்வதனை தடை செய்து, அதற்குப் பதிலாகப் பாரம்பரிய தானியங்கள் மற்றும் உணவுகளை மட்டுமே பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் சமுதாயக் கொண்டாட்டங்கள் பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் கலாசார நடைமுறைகளுக்குத் திரும்புவதனை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அபராதத்துடன், விதிகளை மீறுகின்ற குடும்பங்களின் நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 Comments