பிரேஸிலில் 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெயிர் போல்சனரோ (70). இவர் 2022 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றதையடுத்து ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தேர்தலில் தான் தோல்வியடைந்ததை போல்சனரோ ஒப்புக் கொள்ளவில்லை.
எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து ஆட்சி கவிழ்ப்புச் சதியில் ஈடுபட்டார். இதனால் அவருடைய ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அரசு கட்டிடங்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல்களை நடத்தினர்.
ஆனால் இராணுவத்தின் முயற்சியால் குறித்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு தலைமை தாங்கியதாக ஜெயிர் போல்சனரோவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை பிரேசில் உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் போல்சனரோவுக்கு 27 ¼ வருடங்கள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் பிரேஸில் ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, அடுத்த வாரம் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், போல்சனரோவை முன்னதாகவே கைது செய்த பொலிஸார் பிரேசிலியாவிலுள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments