இவ்வருடம் GCE A/L)பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் 2025 நவம்பர் 04 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் முடியும் வரை இத்தடை அமுலில் இருக்குமென்றும் பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வருடம் GCE (A/L) பரீட்சையானது 2025 நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, 2025 டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments