Ticker

10/recent/ticker-posts

2007 க்கு பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்க தடை விதித்த மாலைத்தீவு..

மாலைத்தீவு நாட்டில் உலகில் முதன் முறையாக தலைமுறை அடிப்படையில் புகைபிடிப்பதை தடை செய்துள்ள நாடாக மாறியுள்ளது.

2025 நவம்பர் 01 முதல் அமலுக்கு வந்த புதிய சட்டத்தின் பிரகாரம், 2007 ஜனவரி 01 க்குப் பின்னர் பிறந்தவர்கள் புகையிலை பொருட்களை வாங்கவோ, பயன்படுத்தவோ முடியாது.

இத்தடையானது அனைத்து வகையான புகையிலை, மின்னணு சிகரெட் மற்றும் வேப்பிங் பொருட்கள் மீதும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோருக்கு அதிகபட்சம் 50,000 ரூஃபியா (சுமார் ரூ.3,200) அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments