முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பிலுள்ள நிதாஹஸ் மாவத்தையிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்காக தனது பொருட்களை தயார் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் நீக்கச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு 2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியிருந்தார்.
எனினும், அவர் தற்போது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்காக தனது பொருட்களைத் தயார் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அடுத்த 02 அல்லது 03 நாட்களுக்குள் அவர் குறித்த இல்லத்திலிருந்து புறப்படுவார் என்றும் அவருடைய ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


0 Comments