பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதன் மூலமாக, ஆசிரியர்களின் பாடசாலை நேரத்திற்குப் பின்னரான பணிச்சுமை குறையும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் மதுர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தொகுதி முறை (மோடுலே system) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், இதன் மூலமாக ஆசிரியர்களின் வேலைப்பளு பாடசாலை நேரத்திற்குள் மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் நீடிக்கப்பட்ட பின்னர், ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுமென்றும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இக்கல்வி மறுசீரமைப்பின் மூலமாக கல்வித் துறைக்கு மிகவும் பயனுள்ள மாற்றம் நடைபெறுகிறது என்று தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments