Ticker

10/recent/ticker-posts

FIFA U17 World Cup 2025: கத்தார் அணியின் லீக் போட்டிகள் அட்டவணை வெளியீடு.

 தோஹா: கட்டாரில் நடைபெறவுள்ள FIFA U17 World Cup 2025 கால்பந்து தொடர் போட்டிக்கான அட்டவணை (Match Schedule) தற்போது வெளியாகியுள்ளது. போட்டி நடத்தும் நாடான கத்தார் அணி ‘A’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

அணியின் 03 லீக் போட்டிகளும் நவம்பர் மாதம், தோஹாவிலுள்ள அஸ்பையர் ஸோன் – பிட்ச் 07 மைதானத்தில் நடைபெறவுள்ளன. அனைத்து போட்டிகளும் கத்தார் நேரப்படி மாலை 6:45 PM மணிக்கும் (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 9:15 PM மணிக்கும்) தொடங்கும்.

📅 கத்தார் அணியின் முக்கியப் போட்டிகள்:

நவம்பர் 03, திங்கள்: கத்தார் vs இத்தாலி

நவம்பர் 06, வியாழன்: கத்தார் vs தென்னாப்பிரிக்கா

நவம்பர் 09, ஞாயிறு: பொலிவியா vs கத்தார்

தமது முதல் போட்டியில் பலம் வாய்ந்த இத்தாலி அணியை எதிர்கொள்வது, கட்டார் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments