Ticker

10/recent/ticker-posts

வவுனியாப் பல்கலையின் முதல் ஆண்டு மாணவன் திடீர் மரணம் ; பகிடிவதை காரணமா?

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழிநுட்ப பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

எனினும், இந்த மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என்று மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவர் உயிரிழந்தபோது, ​​அவருடைய உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என்று மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Post a Comment

0 Comments