Ticker

10/recent/ticker-posts

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று (19) ரூபாய் 2,000 அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் காட்டுகின்றன. 

இதன்படி இன்று காலை கொழும்பு தங்கச் சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலையானது ரூபாய் 302,700 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலையானது 329,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 இதன்படி, 24 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 41,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,838 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.


Post a Comment

0 Comments