Ticker

10/recent/ticker-posts

21ஆம் திகதி எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளும் மஹிந்த ராஜபக்ச

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கண்டி தலதா மாளிகைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.



முன்னதாக இப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments