Ticker

10/recent/ticker-posts

அதிகரிக்கப்படும் பாடசாலை நேரம் ; பிரதமர் வெளியிட்ட தகவல்.

பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கின்ற முடிவை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

‎குளியாப்பிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் ம் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

‎"மாற்றங்களைச் செய்யும் போது வெவ்வேறு கருத்துகள் வெளிப்படுவது சாதாரணமானது" என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‎எவ்வாறாயினும், எந்தவொரு ஆய்வையும் மேற்கொள்ளாமல் பாடசாலை நேரத்தை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

‎இந்த முடிவுக்கான காரணங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments